Top 3 Time Wasting Habits In Tamil - உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயல்கள்
இந்தப் பதிவில் நேரத்தை வீணடிக்கும் விஷயங்களை பற்றி பார்ப்போம். அதாவது சில நேரத்தில் நீங்கள் உங்களுக்கு உபயோகமற்ற செயல்களை செய்வீர்கள் அதேதான் நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள் என்று கூறுகிறேன்.
கீழே குறிப்பிட்டுள்ள மூன்று விஷயங்களும் தனது வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் யாரும் இந்த செயலை செய்ய வில்லை. அதனால் நீங்களும் இந்த செயலை இந்த நொடியில் இருந்தே செய்யாதீர்கள்.
Top 3 Time wasting Habits
Television :
உலகம் முழுவதும் நடைபெற்ற ஆய்வில் பெரும்பாலான மக்கள் தனது நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் வீண் அடிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சி என்பது முட்டாள்கள் பார்ப்பது ஆகும். அதாவது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் உங்கள் வாழ்க்கைக்கு தேவை உள்ள விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் அதைவிட்டுவிட்டு தொலைக்காட்சியில் வரும் நாடகம், சில தேவையற்ற படங்கள், தேவையற்ற ப்ரோக்ராம்ஸ் பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
நான் தொலைக்காட்சி முழுவதும் தவறு என சொல்ல மாட்டேன் ஏனெனில் அதில் சில தேவையுள்ள சேனல்கள் இருக்கிறது அதாவது டிஸ்கவரி அனிமல் பிளான்ட் நேஷனல் ஜோகிராஃபிக் வைல்ட் ஆகும். உங்களுக்கு அறிவியல் மற்றும் விலங்குகள் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமிருந்தால் அந்த சேனலை மட்டும் பார்க்கலாம். நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் உங்கள் உடல் மனம் மூளை திறன் என அனைத்துமே பாதிக்கப்படும் அதனால் முடிந்த அளவு நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் இப்பொழுது சொல்வீர்கள் என் மனதிற்கு ஓய்வு கொடுக்க தொலைக்காட்சி பார்க்கிறேன் என்று கூறுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு வெற்றி பெற்ற மனிதனிடம் போய் இந்தக் கேள்வியைக் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் இல்லை என்றுதான் கூறுவார்கள் அவர்கள் அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தேன், விளையாட்டு பயிற்சி செய்தேன், புத்தகங்கள் படித்தேன் என்று தான் கூறுவார்கள் அதனால் தான் அவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி அடைய முடிந்திருக்கிறது. அவர்களும் உங்கள் போல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை வெறும் தொலைக்காட்சியில் முடிந்துவிடும்.
ஏன் வெற்றி பெற்ற மனிதரெல்லாம் தொலைக்காட்சி பார்க்கவில்லை என்று கேட்பீர்கள்? நீங்களே இப்பொழுது கணக்கிட்டு பாருங்கள் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நாலு மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பீர்கள். அந்த நாலு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு உங்கள் வாழ்க்கையை செய்து இருக்கான் எடுத்துக்காட்டாக ஒரு புத்தகம் படித்திருக்கலாம் உங்கள் லட்சியத்திற்கு தேவையான செயல்களை செய்து இருக்கலாம் உங்கள் வாழ்க்கை பொருளாதாரம் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் வாழ்க்கையை மாறியிருக்கலாம் என்று நினையுங்கள். அதனால் இனிமேல் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவை என்று தேடுங்கள்.
Social Media
இப்பொழுது இளைஞர்கள் மற்றும் இந்தியர்களின் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள் இந்த சமூக இணையதளத்தை. நீங்களே இப்பொழுது நினைத்து பாருங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் மற்றும் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் அவர்களுக்கு தனியாக எந்த social media வளும் இருக்கமாட்டார்கள்.
சில பிரபலங்கள் இருப்பார்கள் ஆனால் அந்த பிரபலங்கள் யாரும் அவர்களே வந்து சோசியல் மீடியாவில் எந்த ஒரு பதிவு செய்ய மாட்டார்கள் அவர்களுக்கு கீழே உள்ள வேலை ஆட்கள் மூலம்தான் இந்த சோசியல் மீடியாவில் பதிவு செய்யப்படும். நீங்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு அந்தப் பிரபலம் தான் பதிவு செய்திருக்கிறார் என்று அதனை நீங்கள் ட்ரெண்டிங் ஆகி விடுவீர்கள். அதனால் உங்களுக்கு ஒரு லாபமும் கிடையாது அனைத்து லாபமே அந்த பிரபலங்கள் மட்டும்தான்.
இந்த சமூக இணையதளத்தை நல்ல தீர்க்கும் பயன்படுத்தினார்கள் கேட்டதற்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த சோசியல் மீடியாவில் உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவை என்று அதை மட்டும் தேடுங்கள். தேவையற்ற பிரபலங்களை பின்தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் அதனால்தான் பல பிரபலங்கள் எங்களை பின் தொடர வேண்டாம் என்று கூறுகிறார்கள். உங்கள் நேரத்தை சேமிக்க தான் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதனால் உங்கள் பொன் போன்ற நேரத்தை தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடாதீர்கள். ஏனெனில் உங்கள் நேரம் போனால் திரும்பி வரவே வராது என்று எண்ணி செயல்படுங்கள்.
Don't Sleep At Day Time
ஆம், உங்கள் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் பகல் நேரத்தில் தூங்க கூடாது. ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் சோதிய கொதித்தவுடன் இறந்துவிடுவார்கள் சூரியன் மறைந்தவுடன் தூங்கிவிடுவார்கள் இதனால் நம் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் கிடைத்தது ஆனால் காலப்போக்கில் இது மாறி விட்டாலும், அதிலும் பலர் சில மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். அதாவது மதியம் மற்றும் சாப்பிட்ட பின் சிறிது ஓய்வு எடுக்கிறார்கள். அந்த தவறை மட்டும் யாரும் செய்யாதீர்கள்.
இதனால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் பல கேடுகள் விளையும். எப்பொழுதும் ஒரு மனிதன் இரவு நேரத்தில் தான் தூங்க வேண்டும் அப்போதுதான் அவனுக்கு முழு தூக்கம் மற்றும் அவர் உடம்பில் சுரக்க வேண்டிய சுரப்பிகள் எல்லாம் சரியாக சுரக்கும் நீங்கள் மட்டும் காலை வேளையில் தூங்கிவிட்டால் அந்த சுரப்பிகள் எல்லாம் இரவில் சுரக்க வாய்ப்பில்லை அதுமட்டுமின்றி உங்களால் இரவில் முழுமையாகவும் தூங்க இயலாது.
அந்த தூங்கும் நேரத்தில் உங்களால் பல விஷயங்களை இலக்க இயலும். தூக்க வேறும் நேரத்தில் ஏதாவது உங்களுக்கு பிடித்த செயல்களை செய்யுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு எது தேவை என்று அதனை கற்றுக் கொள்ளுங்கள். அதனால் காலை மற்றும் மதிய நேரங்களில் தூக்கத்தை தவிருங்கள்.
Top 3 Time Wasting Habits In Tamil Conclusion :
இந்த மூன்று விஷயங்களெல்லாம் தனது வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களால் கூறப்பட்டவை மற்றும் பல ஆய்வுகளை கண்டுபிடிக்கப்பட்டவை. அதனால் இந்த மூன்று விஷயங்களையும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்யாதீர்கள்.
இதனால் உங்கள் வாழ்க்கை லட்சியம் மற்றும் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று நினையுங்கள். அதனால் இதில் குறிப்பிட்டுள்ள 3 நேரத்தை வீணடிக்கும் எந்த விஷயங்களையும் செய்யாதீர்கள் என்று கூறுகிறேன். எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி காணுங்கள்.
நேரம் பொன் போன்றது!